தக்காளி சூப்

தக்காளி சூப்..!!!

தேவையானவை:

தக்காளி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள், பால், நறுக்கிய கொத்தமல்லி தழை - தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி... அதில் நறுக்கிய தக்காளியுடன், ஒரு பெரிய வெங்காயத்தை பெரியதாக நறுக்கிப் போட்டு வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி, மற்றொரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்த தக்காளி - வெங்காய சாறை ஊற்றி, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். சோளமாவை பாலில் கரைத்து, கொதிக்கும் கலவையில் ஊற்றி... உப்பு, மிளகுதூள், நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க வைத்து, இறக்கவும்