வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையானவை:

முற்றிய வாழைக்காய் - இரண்டு, எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

வாழைக்காயைத் தோலுடன் தடிமனான துண்டுகளாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வேக வைத்து ஆறியதும் தோலை உரித்து நன்றாக மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்து மசித்து வைத்துள்ள வாழைக்காயில் கொட்டி உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். இதை எல்லா சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.