பொரித்த ரசம் – 2

பொரித்த ரசம் – 2


தேவையானவை:

வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் – 2 கப், காய்ந்த மிளகாய் – 3, உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தனியா – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு – ஒரு கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, உப்பு கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து…. கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.