சமையல் டிப்ஸ்1

சமையல் டிப்ஸ்1
!!!
*. கொத்தமல்லித் தழையுடன் உப்பு பச்சை மிளகாய் சேர்த்து, அரைத்து, அதை வடைகளாகத் தட்டி, வெயிலில் காயவைத்துக் கொண்டால், அதை, குழம்பு ரசம் வைக்கும்போது சேர்க்கலாம். கூடுதல் மணமும் சுவையும் கிடைக்கும்.
* தக்காளி நன்றாகப் பழுத்துவிட்டால், உப்புத்தூளில் பிசிறி வைத்துவிட்டால், 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
* சப்பாத்தி பூரிக்கு மாவு பிசையும்போது அத்துடன் கொஞ்சம் கடலைமாவையும் கலந்து பிசைந்தால், பூரி சப்பாத்தி கூடுதல் சுவையுடனும் மொறமொறப்பாகவும் இருக்கும்.
* வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து ஊற்றவும். சுவையும் சத்தும் கூடும்.
* வாழைப்பூ அடைக்கு பூவை அப்படியே நறுக்கிப் போடக்கூடாது. வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு வேக வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மாவில் கலந்து அடை செய்யவும். சுவையாக இருக்கும்.
* நுங்கை வாங்கி வந்ததும் சிறிது னேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பிறகு எடுத்து தோலை உரித்தால், எளிதாக வரும். ஜில்லென்று இருக்கும்.
* கூட்டு செய்யும்போது, உளுத்டஹ்ம் பருப்பு டஹ்னியா இவைகளை அரைத்து விட நேரம் இல்லையென்றால், பரவாயில்லை. கொஞ்சம் ரசப்பொடியைசேர்த்தால், அரைத்துவிட்ட அதே டேஸ்ட் கிடைக்கும்.
* முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி, வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான ‘ கோஸ் துவையல்’ தயார்.
* எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன், நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கவும். பிறகு முழு பழங்களைப் போட்டு மூடி வைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு அடியோடு இருக்காது.
* கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும்.
* இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும். உளுந்துக்கும் இதற்கும் மணம், சுவையில் வேறுபாடு தெரியாது. செலவும் குறைவு.
* இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்தை சற்றுக் குறைத்துவிட்டு, இளம் வெண்டைக்காயை நறுக்கிப் போட்டு ஊற வைத்து அரைக்கவும். இட்லி மிருதுவாக வரும்.
* எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அத்துடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அள்ளும்.
* அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேகுழல், ஓமப்பொடி செய்யும்போது உருளைக் கிழங்கை வேஅக் வைத்து ,மாவுடன் கலந்து பிசைந்தால், சுவை கூடும்.
* அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.
* பனீர் பொறிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு போட்டு, பொறித்தால், சீராகப் பொறியும். சாதாரணமாகப் பொறிக்கும்போது சில இடங்களில் கருகுவது போல கருகவும் செய்யாது.
* காலிஃப்ளவரை ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது, ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கக் கூடாது. அடியில் உள்ள கிடிஸ்டரில் வைக்கலாம். அதிலும் தண்டுப் பகுதி மேற்புறமாக இருக்கும்படி வைத்தால் ஈரம் பூவின் மேல் தாக்காது.
* ஜாங்கிரிக்கு நீரில் ஊற வைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.
* வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தைக் கரையவிட்டு, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால், அப்பம் புஸ்ஸென உப்பி வரும்.
* சூடான இட்லியைத் தேனில் தொட்டு சாப்பிட்டால், மூல நோயின் தாக்கம் குறையும்.
* சூடாக இருக்கும் கறந்த பாலில் தேன் கலந்து அருந்தினால், மூளை வலிமை பெறும்.
* இனிப்பான மம்பழச் சாற்றில் தேன் கலந்து அருந்தினால், நரம்புத் தளர்ச்சி நோய் மறையும்.
* கொஞ்சம் பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகினால், வயிற்றுப் பொருமல் நிற்கும்.
* ஜீரகத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கசக்கி இரண்டு பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து, ஒரு பங்காக தண்ணீர் சுண்டியதும் எடுத்து வடிகட்டி வெதுவெதுப்பான பதத்தில் அருந்தினால், அஜீர்ணத்தால் வரும் வயிற்றுவலி அகலும்.