இருபுளி குழம்பு

இருபுளி குழம்பு


தேவையானவை:

புளித்த மோர் - ஒரு கப், நறுக்கிய சேனைக்கிழங்கு - ஒரு சிறிய கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,

செய்முறை:

சேனையை துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு... அரைத்து வைத்த விழுது, வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். மோரில் அரிசி மாவைக் கரைத்து குழம்பில் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு:

மோர், புளி இரண்டும் சேர்வதுதான் இருபுளி குழம்பு. இருவிதமான புளிச்சுவையுடன் வித்தியாசமான ருசியில் இருக்கும்.