தேங்காய்ப் பொடி

தேங்காய்ப் பொடி

தேவையானவை: துருவிய தேங்காய் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: தேங்காய் எண்ணெய் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

தாளிக்க: கடுகு, உடைத்த முந்திரி - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கொத்து.

செய்முறை: வெறும் கடாயில் தேங்காயை வறுத்து, தனியே வைக்கவும். அதே கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, வறுக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். வறுத்த தேங்காயைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றிஎடுக்கவும். தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளித்து, அதில், பொடித்தவற்றையும் சேர்த்து, ஒருமுறைப் புரட்டி, அடுப்பை அணைத்துவிடவும். ஆறியதும், காற்றுப்புகாத டப்பாவில்போட்டு, பத்திரப்படுத்தவும். இந்த ரெடிமேட் சட்னி ஒரு வாரம் வரை கெடாது.

பலன்கள்: வெளியூர்களுக்குச் செல்பவர்கள் எடுத்துச் செல்லலாம். இட்லிக்குத் தொட்டுகொள்ளலாம். சூடான சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.

எடைக் குறைந்தவர்கள், அடிக்கடி சோர்வுடன் இருப்பவர்கள், செரிமான சக்தி குறைந்தவர்கள் எடுத்துக்கொள்ளலாம். கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யும் என்பதால், உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடவேண்டாம். எபிலெப்சி வலிப்பு நோய் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.