கொல்கத்தா ஸ்பெஷல்: ஜால் முரி

கொல்கத்தா ஸ்பெஷல்: ஜால் முரி

ஜால் முரி என்பது ஒரு கொல்கத்தா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ரெசிபி. இதில் ஜால் என்றால் காரம் என்று பொருள், முரி என்றால் பொரி என்று அர்த்தம். அதாவது ஜால் முரி என்பதற்கு காரப் பொரி என்று பொருள். இந்த ஜால் முரியானது மாலை வேளையில் டீ/காபியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சிறந்தது. இங்கு அந்த ஜால் முரியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:

பொரி - 2 கப்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது)
சேவ்/மிக்ஸர் - 1/2 கப்
கருப்பு சுண்டல் - 1/2 கப் (ஊற வைத்து வேக வைத்தது) உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஊறுகாய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் கைகளால் அல்லது கரண்டியால் நன்கு கிளறி விட்டு பரிமாறினால், ஜால் முரி ரெசிபி ரெடி!!!