மிளகு சூப்

மிளகு சூப்..!!!

தேவையானவை:

துவரம்பருப்பு - ஒரு கப், வெங்காயம் - ஒன்று, உருளைக்கிழங்கு - ஒன்று (சதுரமாக நறுக்கி கொள்ளவும்), ஆப்பிள் - அரை துண்டு (சதுரமாக வெட்டவும்), தேங்காய் துருவல் - அரை கப் (பால் எடுக்கவும்), பூண்டு - 3 பல், கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப, எலுமிச்சைச் சாறு, வெண்ணெய் - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
கறிப்பொடிக்கு: பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - 3 டீஸ்பூன், மஞ்சள் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 10, சோம்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:

கறிப்பொடிக்கு கொடுத்துள்ளவற்றை தனித் தனியாக வறுத்து ஒன்று சேர்த்து பொடித்துக் கொள்ளவும். குக்கரில் வெண்ணெயை சேர்த்து, சூடானதும் கறிவேப்பிலையை போட்டு, பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய ஆப்பிள், உருளைக்கிழங்கு சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் 2 டேபிள்ஸ்பூன் கறிப்பொடி சேர்த்து, துவரம்பருப்பை கழுவி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். வெந்தவுடன் மூடியைத் திறந்து தேங்காய்ப் பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
இது, சாதத்துடன் கலந்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்