கோக்கி

கோக்கி

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

வெங்காயம், மல்லித்தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அத்துடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சாதாரணமான சப்பாத்திகளாக தேய்த்து, வேகவைத்தெடுங்கள்.