தெரக்கல்

தெரக்கல்

தேவையானவை:

கத்திரிக்காய் 3, உருளைக்கிழங்கு (பெரியதாக) 1, தக்காளி 1, பெரிய வெங்காயம் 1.
அரைக்க: பச்சை மிளகாய் 4, காய்ந்த மிளகாய் 6, சோம்பு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், தேங்காய் 1 மூடி, முந்திரிப்பருப்பு 2, பொட்டுக்கடலை 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

தாளிக்க:

எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன், சோம்பு கால் டீஸ்பூன், மிளகு 10, பட்டை 1 சிறிய துண்டு.

செய்முறை:

கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மூன்றையும் சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை, ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். ஒரு வாணலியைக் காயவைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிப்பவற்றைப் போட்டுத் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய காய்கள், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின், அரைத்த விழுதையும் போட்டு, பச்சை வாசனை போகக் கிளறி, 4 அல்லது 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சேர்ந்தாற்போல வந்ததும் இறக்கி பரிமாறவும். இதுதான் செட்டிநாட்டு தெரக்கல். இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டாவுக்கான நல்ல ஜோடி. (கேரட், பட்டாணி, பட்டர் பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்)