கோஸ் வறுவல்

கோஸ் வறுவல்

என்னென்ன தேவை?

கோஸ் (நறுக்கியது) - 2 கப்

கடலை மாவு - 3 டீஸ்பூன்

சோள மாவு - 2 டீஸ்பூன்

தனியாத் தூள் - அரை டீஸ்பூன்

இஞ்சித் துருவல் - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முட்டை கோஸை சற்று பெரிய இதழ்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதனுடன் கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், இஞ்சித் துருவல் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கோஸ் கலவையை தூள் பகோடா போல உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுங்கள். சாம்பார் சாதம், புலவ், கலந்த சாத வகைகளுக்கு இதைத் தொட்டுக்கொள்ளலாம். மாலை நேரத் தேநீருடன் நொறுக்காகவும் சுவைக்கலாம்.