சேமியா அடை

சேமியா அடை

தேவையானவை:

வறுத்த திக்கான சேமியா - 2 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 அல்லது 3 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
தயிர் - முக்கால் கப்
அரிசி மாவு - முக்கால் கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வாய் அகன்ற பாத்திரத்தில் வறுத்த சேமியா, தயிர், உப்பு, அரிசி மாவு ஆகியவற்றைப் போட்டு தேவையான தண்ணீர் விட்டு, அடை மாவு பதத்துக்கு கலக்கி, 15 நிமிடங்கள் வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, இக்கலவையை மாவில் கலந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அடையாக வார்த்து எடுத்து, மிளகாய்ப்பொடி அல்லது மிளகாய் சட்னியோடு பரிமாறவும்.