பீட்ரூட் வெல்ல அடை

பீட்ரூட் வெல்ல அடை

தேவையானவை:

பீட்ரூட் துருவல் - 2 கப், பால் - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 கப், கோதுமை மாவு - அரை கப், பால் பவுடர் - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 3 கப், வறுத்த முந்திரி - 10, ஏலக்காய் - 5, பச்சைக் கற்பூரம் - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

பீட்ரூட் துருவலை பாலில் வேகவிடவும். அரிசி மாவு, கோதுமை மாவை தனித்தனியே சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். வெல்லத்தில் 3 கப் நீர் விட்டு கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் கொதிக்கவைக்கவும். கலந்து வைத்துள்ள மாவை இதில் தூவிக் கிளறவும். வேகவைத்த பீட்ரூட் துருவல், நசுக்கிய ஏலக்காய், வறுத்த முந்திரி, பச்சைக் கற்பூரம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சிறிது நெய்யை கையில் தொட்டுக்கொண்டு, மாவுக் கலவையை சிறிய, சற்று கனமான அடைகளாகத் தட்டி, இட்லி குக்கரில் ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

சூடாக வெண்ணெய் தொட்டுக்கொண்டு சாப்பிட... மிகவும் ருசியாக இருக்கும்! இந்த அடை, சத்து நிறைந்தது