வெரைட்டி தானிய பொடி

வெரைட்டி தானிய பொடி

தேவையானவை:

துவரம்பருப்பு ஒரு கப், எள் - 4 டீஸ்பூன், மல்லி (தனியா) - 2 டீஸ்பூன், ஓமம், சீரகம் தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், மிளகு - 10, உப்பு தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, எள், தனியா, ஓமம், உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். சாதத்துடன் இந்தப் பொடியைக் கலந்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிட... ருசியோ ருசிதான்!