பசலைக் கீரை சூப்

பசலைக் கீரை சூப்- செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
பசலைக் கீரை-1 தம்ளர்; வெங்காயம்-தக்காளி- தலா 1; சோள மாவு-1 தேக்கரண்டி; மிளகுத்தூள், வெண்ணெய், ‘பிரெஷ் க்ரீம்’; உப்பு.
செய்முறை:
பசலைக் கீரையை தண்ணீரில் அலசி, பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியையும், சிறுசிறு துண்டுகளாக்கவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய் போட்டு உருக்கி, வெங்காயம் தக்காளி, கீரை, உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.பிறகு இறக்கி ஆறியபின் மிக்ஸியில் விழுதாக அரைத்து, சோளமாவு சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட்டு இறக்கவும். மிளகுத்தூள், ஃபிரெஷ் க்ரீம் சேர்த்துப் பருகலாம். குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.
மருத்துவப் பலன்:
பசலைக்கீரை இரும்புச் சத்தைக் கொடுக்கும்.
பளபளக்கும் மேனிக்கு பசலை என்கிறது, நமது இயற்கை வைத்தியம். ஆகவே மேனி பளபளப்பு பெறும்.
உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும்.
சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள கீரை பசலையே!