வேப்பம்பூ துவையல்

வேப்பம்பூ துவையல்

தேவையானவை:

வேப்பம்பூ - ஒரு கப், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 2 டீஸ்பூன், வேர்க்கடலை - 80 கிராம், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் வேப்பம்பூவைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, தனியாக வைக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, பெருங்காயத் தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து, சிவக்க வறுத்து இறக்கவும். இதனுடன் வறுத்த வேப்பம்பூவைச் சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைக்கவும். அருமையான துவையல் ரெடி.

பலன்கள்: சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எளிதில் செரிமானம் ஆகும். வாய்க் கசப்பைப் போக்கும்.