பீஸ் கோஃப்தா

பீஸ் கோஃப்தா

என்னென்ன தேவை?

காய்ந்த பட்டாணி - 1/2 டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு - 1,
பச்சைமிளகாய் - 1,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.

கிரேவி செய்ய...

தக்காளி - 1,
வெங்காயம் - 1,
இஞ்சி - 1/2 துண்டு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
கொத்தமல்லி - அலங்கரிக்க.

எப்படிச் செய்வது?

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் ஊற வைத்த பட்டாணியுடன் பச்சைமிளகாய், கரம்மசாலாத் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து அரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் பட்டாணி கலவை, உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து உருண்டைகளாக உருட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கோஃப்தா தயார். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், துருவிய இஞ்சியை போட்டு வதக்கவும். தக்காளியை மிக்ஸியில் கூழாக்கவும். கடாயில் சீரக இஞ்சி கலவையுடன் பொடியாக அரிந்த வெங்காயத்தை வதக்கவும். தக்காளி கூழ் சேர்த்து கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். சிறிது தண்ணீர் சேர்த்து பொரித்து வைத்து கோஃப்தா உருண்டைகளை போட்டு கொத்தமல்லி தூவி சூடாக சப்பாத்தியுடன் பரிமாறவும். பட்டாணி கோஃப்தா ரெடி.