கேழ்வரகு அடை

கேழ்வரகு அடை

தேவையானவை:

கேழ்வரகு - 500 கிராம்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 150 கிராம்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - பொரிக்க‌

சட்னிக்கு:

துருவிய தேங்காய் - 200 கிராம்

பூண்டு பல் - 2

பொரிக்கடலை - 25 கிராம்

காய்ந்த மிளகாய் - 3

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - பொரிக்க‌

செய்முறை:

கேழ்வரகை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வையுங்கள். மறுநாள் தண்ணீரை இறுத்து புதிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியான மாவாக அரைத்து வைக்கவும். இதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி மாவை இருபுறமும் வேகவைத்து எடுக்கவும் சட்னிக்குத் தேவையானதை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து, ஒரு பவுலில் வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து சட்னியில் ஊற்றி அடையோடு பரிமாறவும்.