ரெட் ரோஸ் வெஜிடபிள் பிரியாணி

ரெட் ரோஸ் வெஜிடபிள் பிரியாணி

தேவையானவை:

எண்ணெய் - 150 மில்லி

காய்ந்த ரெட் ரோஸ் இதழ்கள் - 25 கிராம்

பிரியாணி இலை - 10 கிராம்

பட்டை - 15 கிராம்

ஏலக்காய் - 5

கிராம்பு - 5 கிராம்

சின்னவெங்ககாயம் - 180 கிராம்

பச்சைமிளகாய் - 5

தயிர் - 50 மில்லி (ரைத்தாவுக்கு)

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 5 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

பாஸ்மதி அரிசி - 1 கிலோ

ரோஸ் வாட்டர் - 30 மில்லி

புதினா இலைகள் - 50 கிராம்

கொத்தமல்லித்தழை - 25 கிராம்

நெய் - 50 மில்லி

பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி - தலா 50 கிராம் (மீடியம் சைஸில் நறுக்கவும்)

உப்பு - தேவையாண அளவு

பெரிய வெங்காயம் - தேவையான அளவு (ரைத்தாவுக்கு)

செய்முறை:

பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற விடவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய், சின்னவெங்காயம், பச்சை மிளகாய், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, நறுக்கிய காய்கறிகள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கழுவிய புதினா, கொத்தமல்லித்தழையைச் சேர்த்து நன்கு வதக்கவும். அரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, ரோஸ் வாட்டர், ரோஸ் இதழ்களைச் சேர்த்து ஒரு கலக்குக் கலக்கவும். இதில் அரிசியைச் சேர்த்து மெதுவாக கிளறி மூடி போட்டு, பதினைந்து நிமிடம் வேக விடவும். அரிசி வெந்ததும் இறக்கி விடவும். தயிர், வெங்காயம், உப்பு கலந்து ரைத்தா தயாரிக்கவும். இந்த ரைத்தாவுடன் பிரியாணியைப் பரிமாறினால் சுவை தூக்கலாக இருக்கும்.

ரோஸ் இதழ்களை மாடியில் இரண்டு நாட்கள் காய போட்டு பின்பு உபயோகிக்கலாம்.