கொள்ளு கார அடை

கொள்ளு கார அடை

என்னென்ன தேவை?

கொள்ளு - 2 கப்,
அரிசி - 1/4 கப்,
காய்ந்த மிளகாய் - 5,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

தாளிக்க...

எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
உடைத்த உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது),
இஞ்சி - சிறிய துண்டு,
பெருங்காயம் - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

கொள்ளு, அரிசியினை சேர்த்து 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஊற வைத்த பொருட்களை நன்றாக கழுவி அத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும். தோசை கல்லினை காய வைத்து, மெல்லிய தோசைகளாக ஊற்றவும். ஒருபுறம் நன்றாக வெந்த பிறகு அடையினை திருப்பிப் போட்டு மறுபுறம் வேக விட்டுப் பரிமாறவும்.