இஞ்சி சொரசம்

இஞ்சி சொரசம்- செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்;

இஞ்சி-20 கிராம் (2 இஞ்ச் சைஸில்); கொத்தமல்லி விதை-2 டீ ஸ்பூன்; உலர்ந்த திராட்சை-1 டீ ஸ்பூன்; ஜீரகம்- ½ டீ ஸ்பூன்; ஏலக்காய்-5; தேன்-2 டீ ஸ்பூன்; எலுமிச்சம் பழம் ( மீடியம் சைஸ்) -1.

செய்முறை:

எல்லாப் பொருட்களையும் நைஸாக அரைத்து அத்துடன் 1 டம்ளர் (200 மி.லி) தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையைக் கொதிக்க விடவும். தீயைக் குறைத்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கட்டும். பின்பு, ஆற விட்டு, வடிகட்டி, தேன், எலுமிச்சைச் சாறு கலந்து, 50 மி.லி. தண்ணீர் சேர்த்து கலக்கவும். இது அஜீர்ணத்துக்கும், பசியின்மைக்கும் மிகவும் நல்ல கை மருந்தாகும். இது இரண்டு வேளைக்குப் போதுமானதாகும்.