உருளைக்கிழங்கு சூப்

உருளைக்கிழங்கு சூப்..!!!

தேவையானவை:

வேக வைத்து, தோலுரித்த உருளைக்கிழங்கு - ஒரு கப் வெண்ணெய், மைதா மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), கிரீம், சீஸ், பால் - தலா ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடாயில் வெண்ணெய் சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கி, மைதா மாவை சிறிது சிறிதாக தூவி வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும். இதில் பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டியில்லாமல் கிண்டி மறுபடியும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். (சூப் கெட்டியாக இருந்தால் காய்கறி வேக வைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம்). இதில் உப்பு, மிளகுத்தூள், சீஸ் சேர்த்து, சீஸ் உருகும் வரை வைத்திருந்து இறக்கி, கிரீமுடன் பரிமாறவும்.
குறிப்பு: உருளைக்கிழங்கை தோல் சீவி, சிறிது எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து சேர்த்தும் சூப் செய்யலாம்.