கேரட் சூப்

கேரட் சூப்

தேவையானவை:

கேரட் துண்டுகள் - 2 கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள், தனியாத்தூள் - தலா ஒரு சிட்டிகை, காய்கறி வேக வைத்த நீர் - 2 கப், ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அடி கனமான வாணலியில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், லவங்கத்தூள், தனியாத்தூள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். பிறகு கேரட் துண்டுகள், காய்கறி வேக வைத்த நீர் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). பின்னர் இதை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு அடித்து, உப்பு சேர்த்து நன்கு வடிகட்டி, மீண்டும் வாணலியில் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும். இதை பௌலில் ஊற்றி, மேலே க்ரீம் சேர்த்து புதினா, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.