பனீர் பேபிகார்ன் ரோல்

பனீர் பேபிகார்ன் ரோல்

தேவையானவை:

பனீர் - 100 கிராம், பேபிகார்ன் சீவிய தூள் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், சாட் மசாலா - தலா அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பூரி மாவு தயாரிக்க:

மைதா மாவு, கோதுமை மாவு - தலா ஒரு கப், ரவை - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - சிறிதளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பேபி கார்ன் சீவிய தூள் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சாட் மசாலா, உப்பு சேர்த்துக் கலந்து, துருவிய பனீர் போட்டு கலந்து கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லி தூவி கலந்து கொள்ள... ஃபில்லிங் மசாலா ரெடி!

பூரி மாவுக்கு கொடுத்துள்ளவற்றை பிசைந்து மெல்லிய பூரிகளாகத் தேய்த்து, நடுவில் பாதி அளவில் ஃபில்லிங் மசாலாவை வைத்து, இறுக்கமாக ரோல் செய்யவும். பிறகு ரோலின் இருபுறமும் கொஞ்சம் நறுக்கி இரு ஓரங்களையும் நன்கு அழுத்தி ஒட்டவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, தயார் செய்துள்ள மசாலா ரோலைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இதைப் போல எல்லாவற்றையும் தயார் செய்து பொரித்து எடுக்கவும்.

இதற்கு தொட்டுக் கொள்ள சட்னி, தக்காளி கெட்சப் சிறந்த சைட் டிஷ்.