வெங்காய ரசம்

வெங்காய ரசம்

தேவையானவை:

தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல், தக்காளி – 2, நறுக்கிய வெங்காயம் – கால் கப், புளித் தண்ணீர் – 2 கப், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் (தேவைப்பட்டால் இன்னும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை தூவவும் .