மசாலா சப்பாத்தி

மசாலா சப்பாத்தி

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப், மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரைடீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

கோதுமை மாவுடன் மிளகாய்தூள், கரம் மசாலாதூள், மஞ்சள்தூள், உப்பு, நெய் எல்லாம் சேர்த்து கலந்து, தேவையான தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். சப்பாத்திகளாக திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் கலவை சேர்த்து வேகவிடுங்கள். கரம் மசாலா மணத்துடன் கமகமக்கும் இந்த மசாலா சப்பாத்தி.