கோதுமை ரொட்டி

கோதுமை ரொட்டி

தேவையானவை:
கோதுமை மாவு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 20 கிராம் (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் (ரொட்டி சுடுவதற்கு)
தண்ணீர் - தேவையான அளவு
பச்சைமிளகாய் - ஒன்று
சீரகம் - ஒரு டீஸ்பூன்
காயந்த மிளகாய் - 2 (காரத்துக்கேற்ப மேலும் சேர்த்துக் கொள்ளவும்)

செய்முறை:

கோதுமை மாவில் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் இவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கரைத்து வைத்துள்ள கோதுமை மாவுடன், பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சீரகம் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். தோசைக் கல்லை சூடாக்கி, அனைத்தும் கலந்த இந்த மாவை ஊற்றி இருபுறமும் வேக வைத்து சுற்றிலும் எண்ணெய் விட்டு எடுக்கவும்.

குறிப்பு:
கோதுமையை ஊறவைத்து வடித்து பின் மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்படி கரைக்கும்போது கட்டி வராது.