இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை

இன்ஸ்டன்ட் ஓட்ஸ் தோசை

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப்
ரவை - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - அரை கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - ஒன்று
தயிர் - கால் கப் (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
முந்திரிப்பருப்பு - 5 (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விடாமல் ரவை, ஓட்ஸ் மற்றும் அரிசி மாவை ஒரு நிமிடம் வறுத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பிசிறவும். அடுத்து தயிர், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கலக்கி பத்து நிமிடங்கள் கழித்து... தோசையாக வார்க்கவும். புதினா சட்னி அல்லது உங்களுக்கு விருப்பமான சட்னியோடு பரிமாறவும்.