முருங்கை சூப்

முருங்கை சூப்


தேவையானவை:

முருங்கைக்காய் – 2 (சதைப் பற்றுள்ளது), மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – ஒன்று, பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

முருங்கைக்காய், உருளைக்கிழங்கை நறுக்கி, நீர் விட்டு, குக்கரில் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். முருங்கையின் சதையை சுரண்டி எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக்கொள்ளவும். பாசிப்பருப்பில் ஒன்றரை கப் நீர் ஊற்றி, குக்கரில் வேகவிட்டு மசித்து, தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பருப்பு நீரில் மசித்த உருளைக்கிழங்கு, முருங்கை சதைப்பகுதியை போட்டு கரைக்கவும். இந்தக் கரைசலை வதங்கிய வெங்காயத்தில் ஊற்றி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவைக்கவும். உப்பு, தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், வெண்ணெய், நெய்க்குப் பதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். சூப் செய்யும்போது, எப்போதும் மிதமான தீயிலேயே செய்யவும். நடுநடுவே கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.