வெண்டைக்காய் ஃப்ரை

வெண்டைக்காய் ஃப்ரை

தேவையானவை:
வெண்டைக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை:
வெண்டைக்காயைக் கழுவி, காட்டன் துணியினால் ஈரம்போக துடைத்து படத்தில் காட்டியிருப்பது போல நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கவும். இடை இடையே வாணலியில் சிறிது சிறிதாய் எண்ணெய் சேர்த்து வெண்டைக்காய்களை வதக்கி வேக விடவும். முக்கால் பங்கு வெந்தவுடன் துருவிய தேங்காய் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வேக விட்டு இறக்கவும்.