குடமிளகாய் புலாவ்

குடமிளகாய் புலாவ்

தேவையானவை:

அரிசி - ஒரு கப், குடமிளகாய் - 2, பஜ்ஜி மிளகாய் - 1, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), மல்லித்தழை - கால் கப், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சீஸ் துருவல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சாதத்தை உதிரியாக வடித்து ஆறவிடவும். தேவையான அளவு உப்பை கலந்து கொள்ளவும். குடமிளகாய், பஜ்ஜிமிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகுத்தூள் போட்டு வறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பஜ்ஜி மிளகாய் துண்டுகளை சேர்த்து 3 நிமிடம் வதக்கிக் கொள்ளவும். குடமிளகாய் துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். காய்கறி கலவை ரொம்பவும் குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும். ஆறிய சாதத்தை காய்கறி கலவையுடன் சேர்த்து கிளறவும். மல்லித்தழை தூவி, சாப்பிடுவதற்கு முன்பு சீஸ் துருவலை சேர்த்து பரிமாறவும்.