வெஜ் ரவா நகெட்ஸ்

வெஜ் ரவா நகெட்ஸ்

தேவையானவை:

ரவை - அரை கப்
பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு)
- அரை கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
கரம் மசாலா - அரை டேபிள்ஸ்பூன்
கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் அல்லது மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, காய்கறிக் கலவை, சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள் (அ) மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, ரவையை சிறிது சிறிதாகச் சேர்த்து வதக்கவும். இன்னொரு அடுப்பில் ஒன்றேகால் கப் தண்ணீர் விட்டு நன்கு கொதித்ததும் அதை எடுத்து ரவைக் கலவையில் ஊற்றி கரம் மசாலா, கொத்தமல்லித்தழை சேர்த்து, உப்புமா பதத்துக்கு வெந்ததும் இறக்கி ஆறவிடவும். அதனுடன் கோதுமை மாவு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகப் பிசைந்து, வேண்டிய வடிவத்தில் உருட்டி, நன்கு காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இதை சாதத்துக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம், கட்லெட்டாகவும் செய்யலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் இந்த உணவில் ருசியும் இருக்கும்... சத்தும் இருக்கும்.