மொச்சைக்கொட்டை காரக்குழம்பு

மொச்சைக்கொட்டை காரக்குழம்பு

தேவையானவை:

காய்ந்த மொச்சைக்கொட்டை - ஒரு கப், மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப), மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் - 2 டம்ளர், வெல்லம் - சிறிதளவு, பூண்டு - 10 பல், தேங்காய் அரைத்த விழுது - 3 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

தாளிக்க:

கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், வெங்காய வடகம் - ஒன்று, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

மொச்சைக்கொட்டையை 6 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, சிறிதளவு உப்பு சேர்த்து அரைவேக்காடாக வேகவிடவும். புளிக்கரைசலில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பூண் டுப் பற்களை நல்லெண்ணெயில் வதக்கி சேர்க்கவும். மொச்சைக் கொட்டை, வெல்லம் ஆகியவற்றை அதில் சேர்க்கவும். எல்லாமாகச் சேர்ந்து வரும்போது, அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். தாளிக்கக் கொடுத் துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து, குழம்புடன் சேர்த்துப் பரிமாறவும்.