பொரித்த ரசம் – 1

பொரித்த ரசம் – 1


தேவையானவை:

வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் – 2 கப், தக்காளி – 2, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 3 டீஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

அரைக்க:

துவரம்பருப்பு, தனியா – தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, மிளகு – ஒரு டீஸ்பூன் (சிறிது நெய்யில் வறுக்கவும்), சீரகம் – ஒரு டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்).

செய்முறை:

பருப்புத் தண்ணீர், தக்காளி துண்டுகள் சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும். (அல்லது பருப்பு, தக்காளி துண்டுகளை ஒன்றாக வேக வைத்து மசிக்கவும்). இதில் தேவையான அளவு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொங்க வைத்து, கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து… கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.