போண்டா மோர்க்குழம்பு-

போண்டா மோர்க்குழம்பு- செய்வது எப்படி?:

போண்டாவுக்காக:
உளுத்தம் பருப்பு-1/4 கப்; பச்சரிசி-1/2 டீ ஸ்பூன்; பச்சை மிளகாய்-2; உப்பு-தேவைக்கேற்ப; இஞ்சி-1/2 இஞ்ச் துண்டு; கறிவேப்பிலை-சிறிதளவு.
மோர்க்குழம்புக்காக:
கெட்டித் தயிர்-1 கப்; மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்; உப்பு-தேவைக்கேற்ப;
அரைக்க:
தனியா-1 டேபிள் ஸ்பூன்; கொண்டக் கடலை-2 டீ ஸ்பூன்; இஞ்சி-1 இஞ்ச் துண்டு; பச்சை மிளகாய்-4; துருவிய தேங்காய்-1/2 கப்;.
தாளிக்க:
தேங்காயெண்ணெய்-1 டீ ஸ்பூன்; கடுகு-1 டீ ஸ்பூன்; கறிவேப்பிலை- சிறிதளவு; சிவப்பு மிளகாய்-2.
செய்யும் முறை:
உளுத்தம் பருப்பை அரிசியுடன் சேர்த்து, 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, உளுத்தம் பருப்பு, அரிசி,பச்சை மிளகாய், உப்பு, மிளகு மற்றும் இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். அரைத்த மாவுடன் கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் சிறிது மாவை எடுத்து போண்டாவாக எண்ணெயில் போட்டு நன்கு சிவந்ததும் எடுக்கவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை வைத்து, அதில் பொறித்த போண்டாவைப் போடவும். இதே போல் மீதமுள்ள மாவையும் போண்டாவாக செய்து தண்ணீரில் போடவும்.
தனியாவையும், கொண்டக்கடலையையும் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து பின்பு தண்ணீரை வடிகட்டியபின்,அத்துடன், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு வாணலியில் தயிர், மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி வைத்து, மோர்க்குழம்பு, கொதிக்க ஆரம்பித்ததுமே ஸ்டவ்வை நிறுத்தி வைத்து அத்துடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிக்கவும். பின்னர், அத்துடன் காய்ந்த மிள்காய், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இந்த தாளித்த பொருட்களை மோர்க்குழம்பில் சேர்க்கவும். பின்பு ஊற வைத்த போண்டாக்களை மோர்க்குழம்பில் சேர்த்து நன்றாகக் கலக்கவும். சூடான சாதத்துடன் சாப்பிடவும்.