கேரட் துருவல்

கேரட் துருவல்

தேவையானவை:

துருவிய கேரட் - 1 கப்
உப்பு - சிறிதளவு
எலுமிச்சைச்சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுப்பொடி - அரை டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

வாயகன்ற ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட்டைச் சேர்த்து உப்பு எலுமிச்சைச்சாறு, மிளகுப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்துத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். இதை சாதத்துக்குத் தொட்டு சாப்பிடலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் மாலைநேர சிற்றுண்டியாகவும் சுவைக்கலாம்.

தினமும் கேரட் சாப்பிட்டால், சருமம், கூந்தல், நகங்கள் ஆகியவை பொலிவு பெறும். கண் பார்வைத்திறன் அதிகரிக்கும். துருவிய கேரட்டைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது அவர்களின் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றி சிறந்த பூச்சி நிவாரணியாக இது செயல்படுகிறது