முருங்கை இலைப் பொடி

முருங்கை இலைப் பொடி

தேவையானவை:

சுத்தம் செய்த முருங்கை இலை - 2 கப்
எள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உளுத்தம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் எள்ளை வறுத்துத் தனியே வைக்கவும்.
பிறகு, அதே வாணலியில், ஒரு சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்துப் பொடிக்கவும்.

மீதியுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, முருங்கை இலையை வதக்கவும். மொட மொடப்பாக வந்ததும் இறக்கிவிடவும்.

மிக்ஸியில் எள்ளைப் பொடிக்கவும். இதனுடன் உப்பு, வறுத்த முருங்கை இலை சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்து... முன்பு செய்து வைத்த பொடியைச் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... முருங்கை இலை பொடி தயார்.

இதை காற்றுப்புகாத டப்பாவில் வைத்தால், ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பலன்கள் :

முருங்கை இலையிலும், எள்ளிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ரத்த விருத்திக்கு உதவும். ரத்த சோகையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.