நெல்லிக்காய் ரசம்

நெல்லிக்காய் ரசம்


தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் – 3, பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, துவரம்பருப்பு வேகவைத்த நீர் – ஒரு கப்
பொடி செய்ய: சீரகம் – ஒரு டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, தனியா – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், நெய் – சிறிதளவு.
தாளிக்க: எண்ணெய், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

பொடி செய்யக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி சீவிக்கொள்ளவும். இதனுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பருப்பு வேகவைத்த நீர் விட்டு… வறுத்து அரைத்த பொடி, நெல்லி – இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும் (விருப்பப்பட்டால், இறக்கிய பிறகு எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.)

குறிப்பு: நெல்லிக்காய் விட்டமின்-சி நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை தரவல்லது.