பைங்கன் பர்த்தா

பைங்கன் பர்த்தா

தேவையானவை:

கத்திரிக்காய் - 2
பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

கத்திரிக்காயைக் கழுவி சிறிது நேரம் தண்ணீர் வடிய விடவும். வடிந்ததும் அதன் தோல் மீது சிறிது எண்ணெய் தடவி, அடுப்பை சிம்மில் வைத்து, இடுக்கியின் உதவியுடன் கத்திரிக்காயைச் சுட்டுக் கொள்ளவும். ஆறியதும் கத்திரிக்காயின் தோலை நீக்கிப் பிசிறி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு கலவை ஆகும் வரை வதக்கி, கத்திரிக்காயைச் சேர்த்து உப்பு மற்றும் மிளகாய்த்தூள் கலந்து 5 நிமிடம் வேகவைத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.