கொட்டு ரசம்

கொட்டு ரசம்

தேவையானவை:

புளித் தண்ணீர் – 2 கப், ரசப்பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

ரசப்பொடி செய்ய

தேவையானவை: தனியா – 300 கிராம், மிளகு – 100 கிராம், துவரம்பருப்பு – 100 கிராம், கடலைப்பருப்பு – 50 கிராம், சீரகம் – 25 கிராம், மஞ்சள்துண்டு – சிறியது, காய்ந்த மிளகாய் – 20-லிருந்து 30 அல்லது காரத்துக்கு ஏற்றப்படி (கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்).

செய்முறை: புளித் தண்ணீரை கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன் உப்பு, ரசப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு பொங்கு பொங்கியவுடன் கீழே இறக்கி… கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.