பாெங்கல் குழம்பு

பாெங்கல் குழம்பு

இன்று பாெங்கல் திருநாள், இன்றைய திருநாளில் நிறைய பாரம்பாிய உணவுகள் செய்து சாப்பிடுவது தமிழா்களின் வழக்கம். பாெங்கல் அன்று செய்யப்படும் உணவுகளில் ஒன்றுதான் இந்த பாரம்பாிய பாெங்கல் குழம்பு, இது பெரும்பாலும் கிராமங்களில்தான் செய்யப்படுகின்றன இன்றைய நாகரீக கலாச்சாரத்தில் இவற்றை யாரும் நகரங்களில் செய்வதில்லை. சாி இனி பாெங்கல் குழம்பு எவ்வாறு செய்வதென்று பாா்ப்பாேம் அனைத்து காய்கறிகள், பயறு வகைகள், கிழங்கு வகைகள் சோ்த்து செய்வதுதான் இந்த பாெங்கல் குழம்பு (குறிப்பாக முருங்கை முள்ளங்கி வெங்காயம் இந்த குழம்பில் சோ்ப்பதில்லை) இதை சாப்பிடும் பாேது ஏற்படும் சுவைக்கு அளவே இல்லை இதில் உள்ள காய்களை உண்ணும்பாேது சுவை வாயில் நடனமாடும். கண்டிப்பாக இந்த குழம்பை மாட்டு பாெங்கலுடன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அடிமையாகி பாேய்விடுவீா்கள். சாி இனி அதன் செய்முறையை பாா்ப்பாேம்

தேவையானவை:

பூசணி, பரங்கி, கத்தரி, காரட், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் - சற்று பெரிதாக நறுக்கிய துண்டுகள் தலா கால் கப்

மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்

அவரை, கொத்தவரை, பீன்ஸ் - கால் இன்ச் நீள துண்டுகள் தலா 1/8 கப்

துவரம் பருப்பு - கால் கப்

புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

பெருங்காயம் - ஒரு துண்டு
கடலைப் பருப்பு - 4 தேக்கரண்டி
தனியா - 6 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10 முதல் 15
துருவிய தேங்காய் - அரை கப்

தாளிக்க:

கடுகு - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை

செய்முறை:

புளியுடன் 4 கப் நீர் சேர்த்துக் கரைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை அதன்படி நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். 3 மேசைக்கரண்டி எண்ணெயில் முறையே பெருங்காயம், கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், தேங்காய் முதலியவற்றை தனித் தனியே சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக்கவும். காய்கறித்துண்டுகளை நீர் சேர்த்து நசுங்கும் பதத்திற்கு வேக வைத்து வடிகட்டவும். புளிக்கரைசலைக் கொதிக்கவிட்டு சற்று புளிவாசனை போனதும் பாதி வெந்த காய்கறிகள், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து சேர்ந்து கொண்டதும், அதில் பொடி செய்த கலவை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கொதித்ததும் இறக்கி, ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் கடுகு, வாய் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து போடவும். மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும். கமகமக்கும் பொங்கல் குழம்பு ரெடி. விருப்பப்பட்டால் இதில் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம்