ஒப்பட்டு ரசம்

ஒப்பட்டு ரசம்


தேவையானவை:

வேக வைத்த கடலைப்பருப்பு – அரை கப், தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – 3 டேபிள்ஸ்பூன், புளித் தண்ணீர் – 2 கப், ரசப்பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வேக வைத்த கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாக அரைத்து, வாணலியிலில் சேர்த்து கிளறிக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, பருப்புக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.