கொண்டைக்கடலை சுண்டல்

கொண்டைக்கடலை சுண்டல்

தேவையானவை:

கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க:

கொத்தமல்லி விதை (தனியா) - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறுப்பு எள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

முதல் நாள் இரவே கொண்டைக்கடலையைத் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அதை குக்கரில் போட்டு, ஐந்து விசில் வந்தவுடன் இறக்கி, தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய மிளகாய் சேர்த்து, பொரிந்தவுடன் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து... வேகவைத்த கொண்டைக்கடலையைப் போட்டு சில நிமிடங்கள் கிளறி, அடுப்பை அணைத்து விடவும். வறுத்து அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை வெறும் வாணலியில் போட்டு நன்றாக வறுத்து, ஆறியதும் பொடித்து, செய்து வைத்திருக்கும் சுண்டலில் போட்டு, உப்பு சேர்த்துக் கலக்கவும்.